சந்திரசேகர ராவ் கட்சி பொதுக்கூட்டத்தில் டெல்லி, கேரள முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு!!
தெலுங்கானா முதல்-அமைமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னுடைய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத ராஷ்டிரிய சமிதி என்று தேசிய கட்சியாக அறிவித்தார். இவரது தேசிய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது கட்சி ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடப் உள்ளதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையில் கம்மத்தில் உள்ள மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. பொது கூட்டத்திற்காக சாலைகள் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள், தோரணங்கள் கட்டப்பட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொது கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கின்றனர்.
பினராயி விஜயன் விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் விமான மூலம் பேகம் பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கம்மத்திற்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தேசிய கட்சியாக அறிவித்து பல்வேறு மாநிலங்களில் போட்டியிட போவதாக சந்திரசேகரராவ் அறிவித்த நிலையில் கேரளா மற்றும் டெல்லி முதலமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் பினராயி விஜயன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைத்து தேர்தலில் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.