வயநாடு பகுதியில் புலி தாக்கி 2 மாடுகள் பலி !!
கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி பகுதியில் தொழிலாளி ஒருவரை அடித்து கொன்றது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 2 மாடுகளையும் புலி கொன்றது.
இது பற்றி கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.