மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து கடந்த 3 நாட்களாக, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,108 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1022 கனஅடியாக சரிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 108.94 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 108.37 அடியாக சரிந்து உள்ளது.