கஸக்ஸ்தானின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!
கஸக்ஸ்தானின் பாராளுமன்றத்தை அந்நாட்டு ஜனாதிபதி இன்று கலைத்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துடன் உள்ளூராட்சி சபைகளையும் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகயேவ்வினால் கலைக்கப்பட்டுள்ளன.
மத்திய ஆசிய நாடான கஸக்ஸ்தானில் பாரிய கலவரங்கள் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் அவ்வறிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் நடந்த கலவரங்களில் 238 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.