ரணிலின் கைபொம்மை தற்போதைய பாராளுமன்றம் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைபொம்மையாக பாராளுமன்றம் மாறியுள்ளதாக குற்றஞ்சுமத்திய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்றம் சுயாதீனத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் அவசியம் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்போது இதனைக் கொண்டுவந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலைக் காலந்தாழ்த்த அரசாங்கம் முயற்சிப்பதாக நாட்டு மக்களிடம் பாரிய சந்தேகமும், பயமும் இருக்கிறது.
இவ்வாறான நிலையிலேயே கட்டுப்பணங்களைப் பெற வேண்டாமென பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள அமைச்சின் செயலாளர் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்திருந்தார்.
அமைச்சரவையில் இருந்து கிடைத்த உத்தரவின்படியே தான் இவற்றை செய்ததாகவும் அவர் கூறுகிறார். பின்னர் அவரே ஒரு மணித்தியாலத்தில் அந்த அறிவிப்பை மீள திரும்பப் பெறுகிறார். அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை அவருக்குக் கிடைக்கும். அதுபோல அமைச்சரவையின் செயலாளருக்கும் மூன்று வருட சிறை தண்டனைக் கிடைக்கும் என்றார்.
பாராளுமன்றம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைபொம்மையாக மாறியுள்ளது. இதனால் பாராளுமன்ற சுயாதீனத்தை இழந்துள்ளது. அதுபோல பாராளுமன்றத்தை சபாநாயகர் தற்போது வழிநடத்துவதில்லை எனவும் குற்றஞ்சுத்தினார்.