காலி, கண்டி, நுவரெலியாவில் 300 வீடுகள் அங்குரார்ப்பணம் !!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிய நடன அக்கடமி, இந்திய வீடமைப்புத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக காலி, கண்டி மற்றும் நுவரெலியாவில் 300 வீடுகள், பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம் என்பன இன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.
இதேவேளை, உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்களில் இந்தியாவின் ஈடுபாட்டினை அதிகரிக்கும் புரிந்துணர்வையும் இங்கு காணமுடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் ஆழமானதும் நிலைபேறானதுமான நட்புறவை வலியுறுத்தும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து அங்குரார்ப்பணம் செய்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.