மேகாலயாவில் பாரதிய ஜனதா தனித்து போட்டி!!
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிடுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டும் அதே கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. இப்போது 2-வது முறையாக தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் நாகாலாந்தில் என்.டி.பி.பி. கட்சியுடன் கூட்டணியை தக்க வைத்துள்ளது.
அங்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டை போலவே பா.ஜனதா 20 இடங்களிலும், என்.டி.பி.பி. கட்சி 40 இடங்களிலும் போட்டியிடுகிறது. திரிபுராவில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள ஐ.பி.எப்.டி. கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அங்கு கூட்டணி விவகாரங்களை கவனித்துக் கொள்ள பா.ஜனதாவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.