ரூ.25 லட்சம் பொருட்கள் பறிமுதல்-கலால்துறை தனிப்படை அதிரடி!!
புதுவையில் போலி மதுபானங்கள் தயாரி க்கப்பட்டு தமிழகத்துக்கு கடத்தப்ப டுவதாக கலால்துறை ஆணையர் சுதாகருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் குமரன், வீரமுத்து, சதீஷ், விஜயன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை கடந்த நவம்பரில் ரூ.11 லட்சம், டிசம்பரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போலி மதுபானங்கள், எரிசாராயத்தை கைப்பற்றியது. இந்த நிலையில் அரியூர் பங்கூர் சாராயக்கடை எதிரே பண்ணை வீட்டில் மதுபானங்கள் பதுக்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். ஒரு மினிவேன் 280 அட்டை பெட்டிகளில் 22 வகையான மதுபானங்க ளுடன் வைக்கோல் கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
அந்த வீட்டை முழுமையாக சோதனையி ட்டபோது போலி மது தயாரிக்க தேவையான எரிசாராயம், வண்ண திரவம், காலிபாட்டில்கள், மூடிகள் போன்ற பொருட்கள் இருந்தது. இவை அனைத்தையும் கைப்பற்றிய தனிப்படை யினர் அங்கிருந்த பிரபு, லூர்துநாதன், மோதிலால், லட்சுமிநாராயணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், வாகனம் உட்பட பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். வாகன உரிமையாளர், வீட்டின் உரிமையாளர், மதுபான தயாரிப்பு, கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து கலால்துறையினர் விசாரித்து வருகின்றனர்.