இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.