வள்ளுவர் கோட்டம் அருகே கோவில்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா உண்ணாவிரதம்!!
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா. சி.பி.ராதா கிருஷ்ணன், கனல் கண்ணன், வேலூர் இப்ராகிம், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், வி.பி.துரைசாமி, கருநாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்து ஆலயங்களை அறநிலையத்துறை மேற்பார்வையிடலாம். நிர்வாகம் செய்யக்கூடாது. குத்தகை என்ற பெயரில் கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை தடுக்க வேண்டும். 4 லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் சொத்து விபரங்களை பட்டியலிட வேண்டும். ஆகம விதிமுறைகளில் அரசு தலையிட கூடாது.
அறங்காவலர்களாக அரசியல் சார்பற்றவர்களை நியமிக்க வேண்டும். மீட்கப்பட்ட சாமி சிலைகளை அருங்காட்சியகங்களில் வைக்கக்கூடாது. மீண்டும் சம்பந்தப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உரிய பணியிடங்களை உரிய விதிமுறைப்படி நிரப்ப வேண்டும். கோவில்கள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். மீட்கப்படும் சில சொத்துக்களும் மீண்டும் தாரை வார்க்கப்படுகிறது.
இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர். உண்ணாவிரதத்தில் மாநில செயலாளர் வினோத் ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர், ஹேமமாலினி, ரங்கராஜ், முருகேசன், குருஜி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் நாச்சிகுப்பம் சரவணன், சென்னை மேற்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொன்.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.