சவூதிக்கு செல்கிறார் அமைச்சர் சப்ரி !
வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத்தின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவுள்ள அமைச்சர் சப்ரிக்கும் இளவரசருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், இஸ்லாமிய அபிவிருத்தி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்திக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.