பெண்களுக்கான தெஹ்ரானிய சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷ!!
உலகின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் (20) வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்க்ஷவும் கலந்துகொண்டார்.
அத்துடன் பல நாடுகளின் தலைவர்களது மனைவிகள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெண் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது வெற்றி பெற்ற ஈரானிய பெண்களின் சாதனைகள் குறித்து பேசப்பட்டன.
மேலும், மின்னணுவியல், மருத்துவ உபகரணங்கள், புதிய தொழில்நுட்பம், புத்தாக்கம், வீட்டு வணிகம் என பல்வேறு துறைகளில் ஈரானிய பெண் தொழில்முனைவோரின் சாதனைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்த மாநாட்டின் நோக்கம், உலகின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துபவர்களின் படைப்பாற்றல், யோசனைகளை மேம்படுத்தும் பெண்களைப் பாராட்டுதல், ஆதரவு மற்றும் உதவியளித்தல் என்பதேயாகும்.