நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? – ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் கேள்வி!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது.
இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பாரத் ஜோடோ யாத்திரை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம் கேட்கிறேன்.
நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அவமதிக்கப்படுகிறது. ராகுல் உங்களுக்கு என்ன ஆயிற்று? முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்பட பாதுகாப்புத் துறைக்கான அனைத்தையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம்.
ஆனால் இப்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.