;
Athirady Tamil News

நேதாஜியின் 126வது பிறந்ததினம் – மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்!!

0

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர்.

பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் நேதாஜியின் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

மணல் சிற்பத்துக்குப் பின்னால் சுமார் 450 ஸ்டீல் கிண்ணங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் நேதாஜி என்றும், ஜெய்ஹிந்த் என்னும் சொற்களையும் வரைந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.