கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரே!! – சி வி கே சிவஞானம் தெரிவித்தார்!!
ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த சில நாட்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சி அதனுடைய செயல்பாடுகள், கருத்து வேறுபாடுகள் சம்பந்தமாக பல செய்திகள் வெளிவந்துள்ளன
அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை ஆனால் இருந்தாலும் கூட நேற்றைய தினம்ரெலோவின் பேச்சாளர் சம்பந்தர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை அல்லது செயலற்று போய்விட்டது அவருடைய தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளதாக கூறினார் என ஊடகங்கள் கூறுகின்றன
தமிழரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை ஆனால் இரண்டுபங்காளி கட்சிகளும் தாங்கள் காலம் காலமாக பல காலமாகவே உரசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம் அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள் அது அவர்களுடைய உரிமை கூட்டமைப்பின் உடைய தலைவர் என்பது இதுவரையில் அதாவது பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அதனுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் சம்பந்தன் அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்து இருக்கின்றார்கள் அது முன்பும் அவ்வாறேநடந்தது ஆகவே அவருடைய தெரிவு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய தலைவர் தெரிவு என்பது இதுவரையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றாலே அது பாராளுமன்ற குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்ற குழு தெரிவு செய்த சம்பந்தர் இன்னும் அந்த பதவியில் தான் இருக்கின்றார் ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்த பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஒரு ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது முறைப்படியாக பாராளுமன்ற குழு கூடி அல்லது விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமேதவிர பதவி வறிதாக்கள் செயலற்று போதல் என நீண்ட வரலாற்றைக் கொண்டு ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்று என்னை பொறுத்தவரையில் தமிழரசு கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனுடைய மதிப்பு சார்ந்த விடயத்திலே அதை ஆட்சேபிக்கின்றேன். அது தவறு திரு சம்பந்தன் அவர்கள் இன்னும் பாராளுமன்ற குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!! – சுமந்திரன் எம்.பி. !!
ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டணி: அலட்டிக்கொள்ள விரும்பவில்லை – இரா.சம்பந்தன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றிய ஈழ விடுதலை போராளிகள் – இனி என்னவாகும்?
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
தமிழ் மக்களுடைய பசியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பசியாறக்கூடாது!!