ஆஸ்திரேலியாவில் மேலும் இந்து கோவில் அவமதிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!!
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து மதவெறி சார்ந்த தாக்குதல் அதிகரித்து வருவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 12ம் தேதி மெல்போர்ன் மில் பார்க்கில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் தாக்கப்பட்டது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள், கோவி சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதிச் சென்றனர். 16ம் தேதி கேரம் டான்ஸ் பகுதியில் உள்ள சிவ விஷ்ணு ஆலயத்தை தாக்கிய நபர்கள், இந்து எதிர்ப்பு வாசகங்களை எழுதி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மெல்போர்ன் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள ஹரே கிருஷ்ணா கோவில் எனப்படும் இஸ்கான் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். கோவில் சுவரில் காலிஸ்தான் வாழ்க, இந்துஸ்தான் ஒழிக என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. வழிபாட்டுத் தலத்தை அவமதிக்கும் வகையிலான இந்த செயலைப் பார்த்து கோவில் நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி விக்டோரியா காவல்துறையில் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்து சமூகத்திற்கு எதிரான வெறுப்பு நிறைந்த தாக்குதலை நிகழ்த்தும் நபர்கள் மீது விக்டோரியா காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக சிவேஷ் பாண்டே என்ற பக்தர் கூறியிருக்கிறார்.