;
Athirady Tamil News

காமராஜர் குறித்த கருத்து: தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு நாடார் சங்கங்கள் கடும் கண்டனம் !!

0

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது. இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அவை வருமாறு:- பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.க. வினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறது.

பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்று இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது. தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துகிறோம்.

இக்கூட்டத்தில் டி.எஸ்.எஸ். நாடார் சங்கத்தலைவர் மனோகரன், போரூர் நாடார் சங்கத்தலைவர் ஆனந்தராஜ், முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்கத்தலைவர் தேன்ராஜன், நாடார் பாதுகாப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அயனாவரம் சந்திரமோகன், ஆவடி வட்டார நாடார் சங்கம் ராஜன், கோவில்பதாகை முரளி, கிராமணி முன்னேற்ற சங்கத்தலைவர் பச்சையப்பன், மட்டுமேடு அருணாசல மூர்த்தி, திருவல்லிக்கேணி நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜ், மாதவரம் தங்கக்குமார், இருவொற்றியூர் வீரமணி, விருகம்பாக்கம் மணிராஜ், மாங்காடு துரை, கெருகம பாக்கம் பாலமுருகன், உதய குமார், ஓட்டேரி செல்வராஜ், கோயம்பேடு முத்து, பாண்டியநாட்டு நாடார் பேரவை கொளத்தூர் சுவைராஜா, கொளத்தூர் ஜேம்ஸ் நாடார், கோயம்பேடு வைகுண்டராஜா, வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், பாதாவரம் நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.