எஸ்டோனியா தூதர் வெளியேற ரஷ்யா உத்தரவு!!
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு எஸ்டோனியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எஸ்டோனியாவில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் துாதரக அதிகாரிகள் எண்ணிக்கையை 8 ஆகவும்,இதர ஊழியர்களின் எண்ணிக்கையை 15 ஆகவும் குறைக்க எஸ்டோனியா உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக மாஸ்கோவில் உள்ள எஸ்டோனியா தூதரக அதிகாரி மார்கஸ் லெய்டிரேயை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. தற்போது ரஷ்ய துாதரும் பிப். 7ம் தேதிக்குள் நாட்டில் இருந்து வெளியேறும்படி எஸ்டோனியா அரசு ஆணையிட்டுள்ளது.