சர்வமத ஐக்கியமே சமாதானத்தின் முதற்படி – கரித்தாஸ் வன்னி கியூடெக்!!
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் ‘இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொதுவான பார்வையை ஊக்கவித்தல்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆண்டில்; சர்வமதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல செயற்றிட்ட செயற்பாடுகள் இயக்குனர் அருட்தந்தை செபஜீபன் அடிகளாளரின் தலைமையில் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
சர்வமத ஒன்றிப்பின் மூலமே நாட்டின் சமாதானத்தை அடைய முடியும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட இச்செயற்றிட்டத்தில் முதல் கட்ட நடவடிக்கையாக ஆறு கிராமங்களுக்களில் பிரதிநிதிகள் மற்றும் கிராம மட்ட சிறுவர்கள், இளைஞர்கள், பிரதேச மட்ட சர்வமத மேம்பாட்டுக்குழுக்கள் நிர்ணயிக்கப்பட்டு சர்வமதங்களை வலுப்படுத்தல் எனும் நோக்கில் அவர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
சமாதானம் மிக்க சமுதாயத்தை உருவாக்க பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக மாணவர்களிடம் சமாதான சகவாழ்வு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும் என்னும் நோக்கில் கிளிநொச்சி முல்லைத்தீவு பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதானம் மிக்க சமுகத்தை உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயற்பாடு வழங்கப்பட்டது.
கரித்தாஸ் வன்னி கியூடெக் சர்வமத நல்லிணக்கத்தை மேம்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சர்வமத அங்கத்தவர்களுக்கு மறுவாழ்வுத்திட்டமான உலர் உணவுப்பொருட்கள் மருத்துவ உதவிகள் மற்றும் கல்வி உதவிகள் என்பன இத்திட்டத்தில் செயற்படுத்தப்பட்டது.
சர்வமத சகவாழ்வு அரங்கத்தின் சர்வமத தலைவர்களின் வெளிக்கள ஒன்றுகூடலும் வெளிக்கள தரிசிப்பும் பல் சமயத் தலைவர்களினுடைய மக்கள் சந்திப்புக்களால் மதவிழிமியங்கள் பகிரப்பட்டதுடன் இவ் நிகழ்ச்சி திட்டம் நல்லுறவு பாலத்தினை வலுப்படுத்தும் முகமாகவும் அமைந்தது.
சமய கலாச்சார நிகழ்வுகளும் விசேட தினங்களில் கலை நிகழ்வுகளும் கலாச்சார பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மூலம் கிராம மக்கள் ஒன்றினைந்து சர்வமத நல்லுறவை பலமாக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
சர்வமத சகவாழ்வின் சர்வமதகுருமார்களின் ஒன்றுகூடலும் வெளிக்கள தரிசிப்பும் சமயத் தலைவர்களினுடைய ஆலோசனைத் தீர்மானம் எடுப்பதிலும் பல்துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றும் செயற்பட்டு வருகின்றது.
ஊடகங்கள் மற்றும் சமுக ஊடகங்களுடனும் சர்வமத செயற்பாடுகள் வெளிக்கொணரப்பட்டதுடன் கிளி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மத நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
கரித்தாஸ் வன்னி கியூடெக்கின் நிறுவனப்பொதுப்பணிகளாக சர்வமதக் குழுவினரின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வமத ஜக்கிய ஒளிவிழா கரித்தாஸ் வன்னி கியூடெக்கில் இடம்பெற்றது. கலைநிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மவட்ட சர்வமத குழுவினரும் மதத் தலைவர்களும் பங்குபற்றினர்.