சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி!! (படங்கள்)
தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நிலவும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் 756, 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை(24.01.2023) முற்பகல்-11 மணியளவில் குழந்தைகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வகைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் மேற்படி வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய அத்தியட்சகர் வி.கமலநாதனிடம் நேரடியாக வழங்கி வைத்தார்.
குறித்த உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, விபத்தொன்றில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நீர்வேலியைச் சேர்ந்த க. மதுசன் என்பவருக்கு சிகிச்சைக்காக 100,0000 ரூபா நிதியும், யாழ். தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய முன்னாள் முதல்வரின் பாராட்டு விழாவுக்காக 25, 000 ரூபா நிதியும், அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு பரிசளிப்பு நிகழ்வுக்காக 30, 000 ரூபா நிதியும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”