இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடக்கூடாது – குணதாச அமரசேகர!!
இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமாவதற்கு சீனாதான் காரணம் என தெரிவிப்பதன் மூலம் சீன எதிர்ப்பு உணர்வை அமெரிக்க தூதுவர் உருவாக்க கூடாது என அவர் கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றார் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பகையை உருவாக்க முயல்கின்றார் என குணதாச அமரசேகர தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சீனா ஏற்கனவே இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இணங்கியுள்ளது இந்த அவசியமான தருணத்தில் சீனா இலங்கைக்கு பெருமளவு மருந்து எரிபொருள் உணவு போன்றவற்றை வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள நீங்கள் இலங்கை சீனாவிற்குஇடையில் பகைமையை ஏற்படுத்துவதன் மூலம் நிலைமையை மோசமாக்க முயல்கின்றீர்களா என தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் முன்னரும் தலையிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையை மேலும் ஸ்திரமிழக்க செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம்இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால உறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் நீங்கள் உங்கள் இந்தோ பசுபிக் மூலோபாயத்தை முன்னெடுக்க முயல்கின்றீர்கள் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.