மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு!!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.