2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் !!
2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
2022 இல் சர்வதேச அளவில் 67 பத்திரிகையாளர்களும் ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் 2021ம் ஆண்டை விட இது அதிகம் (45) என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
2022 இல் அதிகளவான பத்திரிகையாளர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே கொல்லப்பட்டுள்ளனர்- கார்டியனிற்கு நீண்டகாலமாக பங்களிப்பு வழங்கிய டொம் பிலிப்ஸ் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
அமேசன் காட்டின் பிரேசில் பகுதியை பாதுகாப்பதற்காக சுதேசிய மக்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த நூலொன்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவேளை இவர் கொல்லப்பட்டார் – இவரின் கொலையாளிகள் இன்னமும் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.
இது நம்பமுடியாத எண்ணிக்கை இந்த வருடமே மிகவும் அதிகளவான பத்திரிகையாளர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கங்கள் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றினால் இன்றி இந்த வருடம்( 2023) வித்தியாசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குற்றங்கள் ஊழல் சூழல் போன்ற விடயங்கள் குறித்த செய்தி சேகரிப்பின் போது அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்கள் குறித்த செய்தி சேகரிப்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ள சர்வதேச ஊடக அமைப்பு உரிய நீதிகிடைக்காமையே இந்த நிலைக்கு காரணம் என தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது இராணுவநடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர் உக்ரேனில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சிபிஜே தெரிவித்துள்ளது.