;
Athirady Tamil News

நிதி மோசடியில் ரூ.103 கோடி இழந்த உலகின் வேகமான மனிதர்: அமெரிக்க புலனாய்வு அமைப்பின் உதவியை நாடிய ஜமைக்கா !!

0

தடகள வீரர் உசைன் போல்ட் தனது மொத்த சேமிப்பையும் நிதி மோசடியால் இழந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க அமெரிக்காவின் உதவியை ஜமைக்கா அரசு நாடியுள்ளது. துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த மக்கள் பணத்தை இழப்பதும் அந்த மோசடி எப்படி நடந்தது என்பதும் காட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் ஜமைக்காவில் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் உலகின் வேகமான மனிதனான தடகள வீரர் உசைன் போல்ட். அந்நாட்டின் கிங்ஸ்டன் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டாக்சன் செக்யூரிட்டி என்ற நிதி நிறுவனத்தில் ரூ.103 கோடி முதலீடு செய்துள்ளார்.

தற்போது அவரது கணக்கில் வெறும் ரூ.9 லட்சம் மட்டுமே இருப்பதாக போல்டின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உலக புகழ் பெற்ற நபர் ஒருவர் நிதி மோசடியால் தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் இழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போல்ட் மட்டுமின்றி ஜமைக்க அரசு அமைப்புகள் உள்ளிட்ட பலர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அனைவருக்குமே இதே நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து முதல் கட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட அந்த நிறுவனம் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி செய்து விட்டதாகவும் பணத்தை மீட்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அந்நிறுவனத்தில் மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க அமெரிக்கா புலனாய்வு நிறுவனமான FBI-யின் உதவியை ஜமைக்கா அரசு நாடியுள்ளது. மேலும், சில நாடுகளில் விசாரணை அமைப்புகளிடமும் உதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் மக்களின் பணம் மீட்டுத்தரப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.