பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை!!!
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது கண்டுபிடிக்கப்பட்ட 170 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தமை தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிப்பதற்காக கொழும்பு நீதவான் இன்று (25) பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.
அந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவரான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி பொதுமக்களிடம் இருந்து 10,000 சத்தியப் பிரமாண மனுக்களுக்கான கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)