;
Athirady Tamil News

ஸ்பெயினில் தேவாலயங்களில் மர்மநபர் கத்திக்குத்து தாக்குதல்- ஒருவர் பலி!!

0

ஸ்பெயின் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயத்துக்குள் நுழைந்தார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினார்.

இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதிரியார்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மர்மநபரை கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. அதேவேளையில் தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. படுகாயம் அடைந்த பாதிரியார் அன்டோனியா ரோட்ரிக்ஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, ‘பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை பயங்கரவாத சம்பவமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.