33 கோடி பரிசை வென்ற தேனீர் கடை ஊழியர் – 2023 இன் முதலாவது கோடீஸ்வரர் !!
ஒரே சீட்டில் 2023 ஆண்டின் ஐக்கிய அமிரேட்டின் முதல் கோடீஸ்வரராக மாறியுள்ளார் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 34 வயதான ரசல் ரெய்ஸ்.
இவர் ஐக்கிய அரபு நாட்டில் ஒரு தேனீர் கடையில் வேலை செய்து வருகிறார்.
ஜனவரி 13 வரை இவர் ஒரு சாதாரண தேனீர் கடை ஊழியர், ஜனவரி 14 அன்று காலை 7. 22 மணிக்கு இணையத்தில் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
இது பற்றி ராசல் கூறுகையில், “நான் எனது பிறந்தநாளின் மாதம்- 6, எனது பிறந்த தேதி-29 , 34 – எனது வயது, 17- மகனின் பிறந்த நாள், 25 – சகோதரியின் பிறந்த நாள் மற்றும் தாயின் பிறந்த தேதி- 22 என்ற எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். இது தான் என் முதல் முயற்சி. பரிசு விழும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.
இரவு 12. 45க்கு அவரது லாட்டரிகள் வெற்றி பெற்றதாக செய்தி வந்துள்ளது. 6 லாட்டரிகளை வெறும் ரூ.333 (யுஏஇ திர்ஹாம் 15)க்கு வாங்கிய அவருக்கு பரிசாக ரூ. 33 கோடி (யுஏஇ திர்ஹாம் 15 மில்லியன்) அறிவிக்கப்பட்டிருந்தது.
2023 இன் முதல் லாட்டரி குலுக்கலில் வென்று 2023 ஆண்டின் லாட்டரி வென்ற முதல் கோடீஸ்வரராக ரசல் மாறியுள்ளார்.
இதை என் சகோதரனிடம் சொல்லியபோது ஏதோ விளையாடுகிறேன். முதல் முயற்சியிலேயே எப்படி பரிசு கிடைக்கும் என்று நினைத்துள்ளார்.
மனைவியும் இந்த செய்தியை நம்பவில்லை. ரசலே நீண்ட நேரம் இது உண்மையா கனவா என்று நினைத்துள்ளார். ஆனால் உண்மையில் பரிசு தொகை வந்து அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசென்றுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் இவர், இந்த தொகையை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தனது குடும்பத்தை நிரந்தரமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.