உலகின் மிகப்பெரிய திராட்சை – விண்ணைத் தொடும் விலை – காரணம் என்ன! !
உலகின் மிகப்பெரிய திராட்சைப் பழங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளதுடன், அவை சுமார் 10 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சாதாரண திராட்சைப்பழங்களை விட பெரிதாக இருப்பதோடு, மிகவும் விலை உயர்ந்த திராட்சை பழங்கள் என்ற உலக சாதனையும் படைத்துள்ளது.
ரூபி ரோமன்ஸ் என அழைக்கப்படும் இந்த திராட்சைகள் 20 முதல் 24 கிராம் வரை இருப்பதுடன், உள்ளூர் கடைகளில் இருக்கும் சாதாரண திராட்சையை விட 4 மடங்கு பெரியது.
விதையில்லாத குறித்த திராட்சை மிகவும் மெல்லிய தோலுடன், இறைச்சி போன்ற சதையைக் கொண்டது.
ரூபி ரோமன்ஸ் திராட்சைகளில் அமிலத்தன்மை குறைவாகவும் சக்கரை அதிகமாகவும் உள்ளதனால் இவை உண்பதற்கு மிகவும் ருசியாக உள்ளது.
இவை குறைவான கசப்புத் தன்மையை கொண்டுள்ளதுடன், அருமையான நறுமணத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த திராட்சைப் பழங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன், பல விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்ட இந்த திராட்சை உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேற்குறித்த காரணங்களால் இந்த ரூபி ரோமன்ஸ் திராட்சையின் விலை விண்ணைத் தொடுகின்றது.