இந்திய – பிரெஞ்சு போர் பயிற்சிகள் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்றன!!
இந்திய கடற்படைக்கும் பிரெஞ்சு கடற்படைக்கும் இடையிலான உயர் ‘போர் பயிற்சிகள்’ உச்சக்கட்டத்தை தொட்டுள்ளதுடன், இந்திய கடற்படையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரெஞ்சு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய அளவிலான நம்பிக்கை உள்ளது. இது இரு நாடுகளும் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் விரிவான மூலோபாய திட்டங்களை செயல்படுத்த முடிவதாகவும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்தார்.
சர்வதேச சட்டம் ஒவ்வொரு இடத்திலும் அனைவராலும் மதிக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். சர்வதேச சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், கடலில் சட்டவிரோத ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் உறுதியளிக்கும் இந்திய கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பானது’ என்று பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் இம்மானுவேல் ஸ்லார்ஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.