பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்த முன்னாள் அமைச்சர் கைது!!
பாகிஸ்தானின் தேர்தல் அதிகாரிகளை விமர்சித்தமையால் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் பவாத் சௌத்திரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (பிரிஐ) கட்சி அரசாங்கத்தில் தகவல்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பவாத் சௌத்திரி.
லாகூரிலுள்ள சௌத்திரியின் வீட்டை புதன்கிழமை (25) அதிகாலையில் முற்றுகையிட்ட பொலிஸார், அவரை கைது செய்தனர்.
பாகிஸ்தானின் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பவாத் சௌத்திரி அச்சுறுத்தியதாக குற்றம் சும்தப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவாத் சௌத்திரியை 2 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்ரான் தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத்துக்கு முன்னர் பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும்.
எனினும், விரைவாக தேர்தலை நடத்துமாறு பிரிஐகட்சி வலியுறுத்துகிறது.