உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்!!
ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7’ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களை பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம் தெரிவித்தது.
இந்த ‘ஐ.ஜி.எஸ். 7 ‘ செயற்கைக்கோளை ’46 எச்2ஏ’ ராக்கெட் சுமந்து கொண்டு ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள், ‘ஐஜிஎஸ்-5’ செயற்கைக்கோளுக்கு மாற்றாக செலுத்தப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.