கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் விலாங்குப் புழு தாக்கம்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கையின்போது விலாங்குப் புழுவின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் பல்வேறுபட்ட நோயின் தாக்கங்கள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதிதாக நெற்பயிர்களில் விலாங்குப் புழுவின் தாக்கமும் அவதானிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்களில் இலைகள் மஞ்சள் நிறமாகி வளர்ச்சி குன்றி காணப்படுகின்றமை தொடர்பில் விவசாயிகளால் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, விவசாய போதனாசிரியர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வயல் நிலங்களை நேற்று (26) கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். ராஜேஸ் கண்ணா, விவசாய போதனாசிரியர்கள் மற்றும் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே குறித்த விலாங்குப் புழுவின் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது.