தேசத்துரோகம் – ரஷ்யாவுக்காக உளவு..! ஜேர்மானியர் கைது !!
நாட்டின் இரகசியங்களை ரஷ்யாவுக்கு அனுப்ப உளவு ஏஜன்சி அலுவலர் ஒருவருக்கு உதவியதாக ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்ற மாதம், ஜேர்மன் உளவு ஏஜன்சியில் பணியாற்றிய கார்ஸ்டன் (Carsten L) என்பவர், தனது பணி மூலமாக பெற்ற தகவல்களை ரஷ்ய இரகசிய உளவுத்துறைக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்காவிலிருந்து ஜேர்மனியின் Munich விமான நிலையம் வந்தடைந்த ஆர்தர் (Arthur E) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆர்தர், கார்ஸ்டனுக்கு தேசத்துரோகம் செய்வதில் உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆர்தர், இரகசிய தகவலை எடுத்துக்கொண்டு ரஷ்யாவிற்குச் சென்று, அங்குள்ள உளவு ஏஜன்சியிடம் அதை கையளித்ததாக அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உளவு பார்க்கும் விடயங்கள் உக்ரைன் ரஷ்யப் போர் நேரத்தில் நடந்துள்ளதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.