;
Athirady Tamil News

இது அவுட் ஆப் சிலபஸ்… எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த மாணவரின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த பிரதமர் மோடி!!

0

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்கள் குறித்து மாணவர் ஒருவர் கேட்டதற்கு நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பதிலளித்தார் பிரதமர் மோடி.

அவர் கூறியதாவது:- இந்த கேள்வி பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள பகுதி (அவுட் ஆப் சிலபஸ்). விமர்சனம் என்பது வளமான ஜனநாயகத்திற்கான சுத்திகரிப்பு யாகம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. விமர்சனம் செய்வதற்கும் குற்றம் சாட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். நீங்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவராக இருந்தால், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. ஏனென்றால் அவை உங்களின் பலமாக மாறும். குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் இயற்கையானது, ஆனால் குடும்பம் சமூக நிலையைப் பார்த்தால், அது ஆரோக்கியமாக இருக்காது.

அழுத்தங்களால் சோர்ந்துவிடாதீர்கள். கவனத்தை சிதற விடாமல் இருங்கள். சிந்தியுங்கள், மதிப்பாய்வு செய்யுங்கள், செயல்படுங்கள்… பின்னர் நீங்கள் விரும்புவதை அடைய முடிந்த முயற்சிகளை செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். நேர மேலாண்மை குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர், நேர மேலாண்மை என்பது தேர்வுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. உங்கள் வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். உங்கள் அம்மா எப்படி நேரத்தை பயன்படுத்துகிறார் என்று கவனியுங்கள். அதிலிருந்து நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.