100வது பிறந்த தினத்தை கொண்டாடிய இரட்டையர்கள் – கின்னஸ் புத்தகத்தில் பதிவு !!
இத்தாலிய இரட்டை சகோதரிகளான தங்களது 100வது பிறந்த நாளை கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களால் ஆச்சரியமுடன் பகிரப்பட்டு வருகிறது.
இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிச்சியார்டி ஆகியோரே தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
தற்போதைய கால சூழ்நிலையில் தனிமனிதர் ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வரையாக குறைந்துவிட்ட நிலையில், 90 வயதை தாண்டி உயிர் வாழும் மக்களை நாம் அனைவரும் ஆச்சரியத்துடனே பார்க்க ஆரம்பித்துள்ளோம்.
இந்நிலையில் இத்தாலிய சார்ந்த பிரான்செஸ்கா(Francesca) மற்றும் மரியா ரிக்கார்டி(Maria Ricciardi) என்ற இரட்டை சகோதரிகள் தங்கள் 100வது பிறந்தநாளை இணைந்து கொண்டாடியதால் இந்நிகழ்வு 200வது பிறந்த தினமாக கொண்டாடப்பட்டது. இவர்களது பிறந்த தினம் அனைவருக்கும் பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்கள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் இருவருக்கும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
1923 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி பிறந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிக்கார்டி திங்களன்று தங்கள் 100வது வயதினை அடைந்தனர்.
உலக செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்த ஒரு காணொளியில், ”100 வயதை எட்டுவது ஒரு சாதனை, ஆகவே இருவரும் இணைந்து தங்கள் ‘200வது’ பிறந்தநாளை கொண்டாடினர்.”என்று தெரிவித்துள்ளது.
இந்த காணொளியில் இரட்டை சகோதரிகள் தங்கள் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ந்தனர், அத்துடன் பலர் இந்த கொண்டாட்டத்தில் அவர்களுடன் கலந்து கொண்டனர். இதற்கிடையில் நிருபர் ஒருவர் இவ்வளவு காலம் வாழ முடியும் என்று நினைத்தீர்களா? என்று கேட்டதற்கு “நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.
இவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை விருதும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக, ரெசிடென்சியா சான்டா மரியா டெல் டுரா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.