;
Athirady Tamil News

முதல்வர் வருகைக்காக மரக்கிளைகளை வெட்டி வண்ணம் தீட்டும் பணி- எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு!!

0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் சீனமுசிடி வாடா, கவுடாவில் இருந்து சாரதா பீடம் செல்லும் சாலையில் நடுவில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணி நடந்தது. இதேபோல் விசாகப்பட்டினம் கடற்கரை சாலை ஓரம் இருந்த மரங்களும் வெட்டப்பட்டன.

பச்சை பசேலென காட்சியளித்த சாலைகள் எல்லாம் தற்போது மரக்கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாக காட்சியளிக்கின்றன. இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டும் பணிக்கு அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்தனர்.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே விஜயவாடா மற்றும் கண்ணாபுரம் பகுதியிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வண்ணம் தீட்டி உள்ளனர். அதே பாணியில் விசாகப்பட்டினத்திலும் பணிகள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.