அவுஸ்திரேலியாவில் ஆபத்தான கதிரியக்க பொருளுடன் கப்ஸ்யுல் ஒன்று காணாமல்போயுள்ளது!!
மேற்கு அவுஸ்திரேலியாவில் கதிரியக்க பொருளை கொண்ட சிறிய கப்ஸ்யுல் காணாமல்போனதை தொடர்ந்து அவசர தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குறிப்பிட்ட கப்;ஸ்யுலில் சிறிய அளவிலான கதிரியக்கபொருளானn சீசியம் 137 காணப்படுவதாகவும் இதனை தொடுபவர்களிற்கு உயிர் ஆபத்து எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி மாதமநியுமென் பேர்த் நகரங்களிற்கு இடையில் இது காணாமல்போயுள்ளது.
பிபரா பிராந்தியத்தின் நியுமென் மற்றும் பேர்த்திற்கு இடையில் சுரங்கமொன்றிலிருந்து கொண்டு செல்லப்படும் போதே இந்த ஆபத்தான பொருள் காணாமல்போயுள்ளது.
சீசியம் 137 நிலக்கரி சுரங்கங்களில் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்சியுலை ஆயுதமாக்க முடியாது ஆனால் இதன் காரணமாக கதிர்வீச்சு எரிவு மற்றும் புற்றுநோய் ஆபத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல்போன பொருளில் இருந்து குறிப்பிடத்தக்க கதிரியக்கம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.