பெண்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி !!
ஐஸ் போதைப்பொருளை பாவிக்கக் கூடியவர்கள் மிகக் குறுகிய காலத்துக்குள் மரணித்துப் போகக்கூடிய ஒரு மோசமான நிலை காணப்படுகிறது என்று வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க தெரிவித்தார்.
தற்போது அதிகளவிலான பெண்களும் ஐஸ் போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனை நாம் மிக விரைவாக இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.
பெண்கள் அதிகம் வீட்டுக்குள் இருப்பதினால் அவர்கள் எங்கே சென்று பயன்படுத்துகிறார்கள் என்று தேடித்திரிய தேவையில்லை வீட்டுக்குள் இருந்தே அவர்களை அவதானித்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
உங்களுடைய பாடசாலை சிறார்களிடத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பதார்த்தங்களினால் செய்யப்படுகின்ற லொலிபொப், மாத்திரைகள் வடிவிலான போதைப் பொருட்களை இவர்கள் வழங்கி விடலாம். இதனால் கட்டாயமாக உங்களது பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான போதைப்பொருள் தடுப்பு வேலைகளை நீங்கள் கடந்த காலத்தில் இருந்தே ஆரம்பித்து இருக்க வேண்டும்.
இப்போதாவது நீங்கள் ஆரம்பித்து இருப்பது நிச்சயமாக உங்களுடைய எதிர்கால குழந்தைகளை அது பாதுகாக்கும்.
இந்த போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து உங்களது சமூகத்தை பாதுகாத்து, போதைப்பொருள் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க நாங்கள் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என்று பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.