விழுந்து நொறுங்கிய 3 இந்திய போர் விமானங்கள் !!
இந்திய ராணுவ விமானப் படைகளுக்கு சொந்தமான மூன்று போர் விமானங்கள் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப் படைகளுக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் குவாரியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இந்திய விமானப்படையில் Sukhoi-30 மற்றும் Mirage 2000 ரக போர் விமானங்கள் மொரீனா( Morena) என்ற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதே போல ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் என்ற பகுதியிலும், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரண்டு சுகோய்-30 ரக போர் விமானத்தில் பயணித்த விமானிகள் தற்போது பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், மிராஜ் 2000 ரக போர் விமானத்தில் பயணித்த விமானி நிலை குறித்து இன்னும் தகவல் எதுவும் தெரியவில்லை என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்து இருப்பதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருவதாக பாதுகாப்பு துறை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் CDS ஜெனரல் அனில் சவுகான் மற்றும் IAF தலைமை ஏர் சீஃப் மார்ஷல் VR சவுதாரி ஆகியோருடன் தொடர்பில் உள்ளார் என்றும் அவர்களிடமிருந்து விபத்து குறித்த விவரங்களை அவர் சேகரித்து வருகிறார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன