;
Athirady Tamil News

புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் சங்க பெண் தலைவர் டிஸ்மிஸ்-செயலாளர் சஸ்பெண்ட்!!

0

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் நித்யா. இவர் பல முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை பதிவாளர் ஜெயபாலன் (பால்வளம்) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்க உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய கொள்முதல் பதிவேட்டை பராமரிக்காதது தெரியவந்தது. மேலும் உறுப்பினர்களிடமிருந்து மொத்தம் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்பட்டது? என்ற விவரம் இல்லை.

உள்ளூர் விற்பனை எவ்வளவு, ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பால் அளவு விவரம் குறித்தும் பதிவேடுகள் இல்லை. சங்க துணை விதிகளுக்கு புறம்பாக உள்ளூர் பால் விற்பனையை குறைத்து காண்பித்து நிதியிழப்பு முறைகேடு செய்தது உறுதியானது. அது மட்டுமல்லாமல் சங்க செயலாளர் பணிக்கு வராமல், ஆள்மாறாட்டம் செய்து கணவர் மற்றும் மாமனார் ஆகியோரை சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்க பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது.

தனியார் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்தது. சங்க கணக்குகள் 1.4.2022 முதல் 20.1.2023 தேதி வரையான ஆவணங்களை சமர்பிக்காமல் தற்காலிக கையாடல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சங்க செயலாளராக இருந்த நித்யாவை தற்காலிக பணி நீக்கம் செய்தும், சங்கத்தின் தலைவர் சாந்தி புஸ்பவள்ளியை டிஸ்மிஸ் செய்தும் மாவட்ட துணை பதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.