ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 2 பேர் உயிரிழப்பு!!
ஈரானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அசர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.