திரிபுரா சட்டசபை தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க, காங்கிரஸ்!!
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகியவற்றின் சட்டசபை பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு இந்த 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக 48 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 17 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.