;
Athirady Tamil News

படையினர் வசமுள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன் விடுவிப்பு!!

0

யாழ்ப்பாணத்தில் மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

தெல்லிப்பழை மற்றும் வசாவிலானில் விடுவிக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார நோக்கங்களுக்காக காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு பிரதேசவாசிகளின் கோரிக்கையும் மீறி 3 ஆயிரத்து 341 ஏக்கர் காணிகளை படையினர் இன்னமும் ஆக்கிரமித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காணி விடுவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.