சீனாவின் செயலால் உருவாகவுள்ள அடுத்த போர் – அமெரிக்காவின் பகிங்க எச்சரிக்கை..!
சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் மீது படையெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் செய்து வருவதாக தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க விமானப்படை தளபதியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அரசியல் பார்வை
சீனாவின் செயலால் உருவாகவுள்ள அடுத்த போர் – அமெரிக்காவின் பகிங்க எச்சரிக்கை..! | Us China War Take Place In 2025
தைவான் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை சீனா தொடர்ந்து சீண்டி வருவதும் அமெரிக்காவை போரில் கலம்கொள்ள வைக்கும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தனி நாடாக விளங்கும் தாய்வானை நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. காலப்போக்கில் தைவானை சீனாவுடன் இணைக்க அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தாய்வானுக்கு பக்கபலமாக இருப்பதால் அந்நாட்டை நெருங்க சீனா தயக்கம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை சீனாவுக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.
இதனால், தைவான் மீது போர் தொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீன இராணுவம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
தைவான் விவகாரம் ஒருபுறம் இருக்க, இந்தியாவையும் அவ்வப்போது சீனா இராணுவ எல்லை மோதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான லடாக், அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் அந்நாட்டு இராணுவம் பல முறை முயற்சி செய்தது.
இந்நிலையில், தாய்வான் மீது போர் தொடுக்க சீனா முயற்சித்தால் அதற்கு முன்னதாக எங்கள் இராணுவத்தை சீனா எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா சமீபத்தில் பகிரங்கமாக எச்சரித்திருந்தது.
அதேபோல, ”இந்தியாவை தாக்கினால் நாங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்” எனவும் அமெரிக்கா உறுதிபட கூறியது. அமெரிக்காவின் இந்த நேரடி எச்சரிக்கையால் சீனா தற்போது இவ்வாறான செயல்களில் சீன தயக்கம் கட்டி வருகிறது.
இருந்தபோதிலும், இந்திய எல்லைகளில் தொடர்ந்து படைகளையும், இராணுவ முகாம்களையும் சீனா குவித்து வருகிறது.