ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!
கொழும்பின் தெமட்டகொட பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக இந்த வழக்கு பெப்ரவரி 28ஆம் திகதி அழைக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த என்ற இளைஞர் ஒருவரை டிஃபென்டரில் கடத்திச் சென்று தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.