வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை!!
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடத்தில் 3.5% எதிர்மறையான பொருளாதாரம் எதிர்பார்க்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதாரத்தை நோக்கி நகர முடியும் எனவும் குறிப்பிட்டார்.