பின்வாங்குகிறதா ஜேர்மனி – புடினின் கோபத்தால் வெளிவந்த முடிவு..!
உக்ரைன் போர் விவகாரம் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினையைக் கொண்டுவரும் என உலக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரஷ்ய உக்ரைன் போரில், பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளன.
அதன்படி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க இருப்பதாக ஜேர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் தெரிவித்திருந்தன.
ஜேர்மனி தனது தயாரிப்பான Leopard 2 என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது.
ஆனால், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது ரஷ்ய அதிபர் புடின் கோபம் கொண்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை, நேரடியாக போரில் தலையிடுவதாகத்தான் ரஷ்யா எடுத்துக்கொள்வதாக கிரெம்ளின் வட்டாரமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், Leopard 2 என்னும் போர் வாகனங்களைத் தொடர்ந்து ஜேர்மனி உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தது.
ஆனால், ஜேர்மன் உயர்மட்ட அதிகாரியான ஓலாஃப் ஷோல்ஸ் அதை மறுத்துள்ளார்.
ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர், ”நாம் உக்ரைனுக்கு Leopard 2 என்னும் போர் வாகனங்களை வழங்கத்தான் முடிவு செய்துள்ளோம். எனினும் ஜேர்மனியில் உலவும் செய்திகள் அர்த்தமற்றவை.” என தெரிவித்துள்ளார்.