நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் – தேர்தல் ஆணையம்!!
நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.