மாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு , சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கிழக்கை சேர்ந்த நந்தகுமார் திருமுருகன் (வயது 15) எனும் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்ற வேளை சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இவருடன் சென்ற மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு, பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவனை பொலிஸார், கடற்படையினர், மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடி வந்த நிலையில், காணாமல் போன சிறுவன் சடலமாக செம்பியன்பற்று கடற்கரையில் சடலமாக கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.