;
Athirady Tamil News

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!!

0

சமூகத்தில் நலிவடைந்தவர்களை வலுப்படுத்துவதற்கான வைகறை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில், கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், 2023 ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களான
மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். முரளிதரன், சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்துள்ள FAIR MED நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் பரத் சுந்தர், FAIR MED நிறுவனத்தின் இணைப்பாளர் வைத்தியர் நயனி சூரியாராச்சி, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நிக்கொலஸ்பிள்ளை , உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.